Sunday, 26 April 2026

சண்டீகேஸ்வரர் வழிபாடு: செல்வமும் சமாதானமும் தரும் சிவனின் காவலரின் ரகசியம்!

 


நாம எல்லோரும் சிவன் கோயில் சிவனுக்கு  அடுத்து தரிசித்து வழிபடக்கூடிய ஒருவர் சண்டிகேஸ்வரர்.  அப்படிப்பட்ட சண்டிகேஸ்வரர் சன்னதியில் இருக்கிற இயற்பியல் மற்றும் நியூரோ சயின்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க. 


இது நம்மளோட அன்றாட வாழ்க்கையிலும் மிக முக்கியமானது.  வெறும் கோவிலுக்கு போயிட்டு சாமிகளை பூஜை பண்ணிட்டு கையெடுத்து கும்பிட்டு வர்றதில்ல. நம்முடைய உடம்புக்கும் மனதுக்கும் நரம்பியலுக்கும் சம்பந்தமான ஒன்று மிகவும் ஆச்சரியமாக இருக்கு. 


வாங்க பார்க்கலாம்.


முதலில் .இந்த சண்டிகேஸ்வரர் அப்படின்ற ஒருத்தரோட வரலாறு மிக சுருக்கமாக இங்கு சொல்கிறேன். 


இவருடைய இயற்பெயர் விசார சருமன். சோழ நாட்டில் திருச்சேய்ஞலூரில் (தற்போதைய கும்பகோணம் அருகில்) என்கிற ஊர்ல மாடு மேய்க்கிற ஒரு சாதாரண சிறுவனா அவர் காணப்பட்டார்.  ஆனால் அந்த சின்ன வயசுலயே சிவபெருமான் மேல அவருக்கு அப்படி ஒரு அதீத பக்தி.  


எப்பவுமே ஒரு ஆற்றங்கரை மணலால் ஒரு சிவலிங்கத்தை செஞ்சு அந்த பசுவிடம் இருந்து பால் கறந்து சிவனுக்கு  அபிஷேகம் பண்ணுவாரு.


இது மட்டும் இல்லைங்க இதை பண்ணிட்டு, உலகமே மறந்து ஒரு ஆழ்ந்த தியான நிலையில் இருப்பாரு. இதுதான் இங்க மிக சிறப்பான ஒரு செயல் ஆகும்.  ஒருநாள் இதை பார்த்த அவருடைய தந்தை எச்சத்தன்,  


“பாலை இப்படி வீணாக்குகிறாயே” அப்படின்னு அந்த மணல் லிங்கத்தை தன் காலால் உதைத்து விடுகிறார். 


அப்போ அந்த சிறுவன் விசார சர்மன், தன்னுடைய சிவ பூஜையை கலைத்தவரை தண்டிப்பதற்காக அவர் பக்கத்தில் இருந்த ஒரு சாதாரண குச்சியை எடுத்து வீசுகிறார்


அது ஒரு மழுவாக மாறி அதாவது கோடாரியாக மாறி தன்னுடைய தந்தையின் கால்களை வெட்டியது.  இதுல என்ன ஒரு விசேஷம் என்றால், தன்னுடைய தந்தை அப்படின்னு பார்க்காம அவர் காட்டின இந்த அதீத பக்தியை மெச்சி சிவபெருமான் அவருக்கு சிவகணங்களுக்கு தலைவராக பதவி கொடுத்தார். இந்த அதீத பக்தியைதான் நாம் அறிவியலில் ஃப்ளோ ஸ்டேட்  அல்லது டீப் ஒர்க் என்று அழைக்கின்றோம். 


ஒரு வேலையில நாம முழுமையா மூழ்கி இருக்கும்போது சுத்தி என்ன நடக்குது என்று தெரியாமல் இருக்கும் நிலை.


உலகமே அழிஞ்சாலும் தன்னை பெற்ற தந்தையே வந்து தடுத்தாலும் தன்னுடைய கவனத்திலிருந்து சற்றும் சிதறாத அந்த மனநிலை இருக்கிறது அல்லவா, அது ஒரு பெரிய விஷயமாகும். சாதாரணமாக அனைவருக்கும் வந்து விடாது.


எந்த சிதறலும் இல்லாத இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம். லேசர் போக்கஸ் டிவோஷன். நம்ம வேலையிலயும் நம்ம நேசிக்கிற விஷயத்திலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் அப்படின்னு அதுக்கு இது ஒரு உதாரணம் இவருடைய கதை.


சித்தர்களின் தத்துவம் இதைத்தான் சொல்கிறது. ஈகோ, பந்த பாசங்கள் அனைத்தையும் விடுத்து, நம்ம   இலக்கோடு நாம் ஒருங்கிணைவது.


இதோட  அறிவியலை பார்க்கலாமா?


நாம மேல்கூறியது போல் சிவாலயங்களுக்கு போகும்போது சண்டிகேஸ்வரர் சன்னதி, கருவறையிலிருந்து அபிஷேகம் நீர் வெளியே வரக்கூடிய வடிகால் பகுதியான கோமுகிக்கு பக்கத்துலதான் அவர் இருப்பாரு.. ஏன் அங்க இருக்கார் தெரியுமா…? சயின்ஸ் என்ன சொல்கிறது? இதுக்குள்ள ஒரு மாபெரும் இயற்பியல் இருக்கு. 


கருவறை என்பது ஒரு உச்சகட்ட மின்காந்த ஆற்றல் மையம். ஒரு எலக்ட்ரோ மேக்னடிக் எனர்ஜி சென்டர். ஈசனின் அந்தப் பிரபஞ்ச ஆற்றலானது அந்த  அலைவரிசையும்… சண்டிகேஸ்வரரின் நிஷ்டை அலைவரிசையும் எப்போதுமே  resonance (அதாவது ஒத்ததிர்வு) இருக்கும்.


In science “This is called principle of resonance” மேலும் சண்டிகேஸ்வரர் சன்னதி ஒரு Step-down transformer  போல் செயல்படுகிறது.  ஒரு ஹை வோல்டேஜ் current-யை, நம்ம வீட்டுக்கு அப்படியே பயன்படுத்த முடியாது அல்லவா. ஒருstep-down transformer  மூலமாக அதை குறைத்துதானே கொடுப்பாங்க.  அதே மாதிரி தான்,  கருவறையோட அந்த அதீத பிரபஞ்ச ஆற்றலை சாதாரண மனிதர்களாகிய நாம் தாங்கக்கூடிய அளவுக்கு குறைத்து பாதுகாப்பா கிரவுண்டிங் செய்து அதை நமக்கு கொடுக்கிறார் சிவபெருமான்.


ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதை தான் “ Law of Conservation of Energy” என்று Physics-இல் படித்துள்ளோம். ஈசனின் அந்த மாபெரும் ஆற்றல் வீணாகாமல் இருக்க,  அதை முழுமையாக உள்வாங்கி சேமிக்கிற கணக்காளராக சண்டிகேஸ்வரர் அந்த கோமுகி பக்கத்துல இருக்காரு.


இன்னொரு விஷயம்… மற்ற சன்னதிகளை ஒப்பிடும்போது… இந்த சண்டிகேஸ்வரர் சன்னதி மட்டும் ஏன் எப்பவுமே இருட்டா இருக்கு?. 


இதைத்தான் நியூரோ சயின்ஸில், Sensort Deprivation  என அழைக்கிறார்கள். அதாவது புலன் ஒடுக்க நுட்பம். முன்னமே பார்த்தோம். சண்டிகேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் உள்ளார் என்று.


மூளையின் அறிவியலின் படி, மனித மூளையில் உள்ள பீனியல் சுரபி இருட்டில் மட்டுமே முழுமையாக செயல்படும்.  அந்த பீனியல் சுரபிதான் நமக்கு தூக்கத்தையும் தியானத்தையும் கொடுக்குது.  இந்த இருட்டில் மட்டுமே Melatonin சுரக்கும் .


அது சுரந்தால் மட்டுமே தியானம் கை கொடுக்கும். இந்த Sensory deprivation -க்கு oppositeதான் Sensory Overload. 

இந்த அற்புதமான சென்சரி டிப்ரிவேஷன் டேங்க் ஆக செயல்படும் சன்னதிகள் நமக்கு சொல்வது என்னவென்றால், வெளிச்சம் காட்டும் மாயைகளை விட்டுவிட்டு உன் உள்முக பயணத்தை தொடங்கு என்பதுதான் இந்த தத்துவம். 


இது மிகவும் ஆழமானது.


வெளிச்சம் வந்து வெளி உலகத்தை காட்டும் இருட்டுதான் நமக்குள்ளே இருக்கும் உலகத்தை காட்டும். 


அதற்கான ஏற்பாடு தான் இது.


இன்னொரு விஷயம். சண்டிகேஸ்வரர் முன்னாடி போய் நாம் கை தட்டுகிறோமே ஏன் அப்படி.


கை தட்டுவது என்பது கூடவே கூடாது.   அது அவரை ஆழ்ந்த தியானத்திலிருந்து எழுப்பி விடுவதைப் போன்று அமையும். இது மிகவும். தவறு. கைகளை உரசுவதோ அல்லது மெல்லிய ஓசையுடன் சுடக்கு போடுவதோ செய்யலாம் இதுதான் மிகவும் சரியான முறை.


இதுதான்Acupressure  எனப்படுகிறது.  நாம் கோவிலை சுற்றி வரும் போது பல நேர்மறையான ஆற்றல்களை உடல் வாங்கிக் கொள்ளும்.  சண்டிகேஸ்வரர் முன்னாள் கைகளை உரசும் போது உள்ளங்கையில் உள்ள நரம்பு முனைகள் தூண்டப்பட்டு மூளையில் தொடர்பு கொள்ளும்.  கோவிலில் நாம் பெற்ற Energy  ஐ , நாம உடம்புக்குள்ள நிலை நிறுத்துற அறிவியல் இது.


மேலும் இப்போ அந்த அபிஷேக நீரானது தொடர்ச்சியா விழும் சத்தம் இருக்கிறது அல்லவா?அதுக்கு வரலாம்.. அது ஒரு White Noise  போல செயல்படுது.


இந்த Acupressure -உம், White Noise-உம்  சேரும் போது,  நம்ம மூளை ஆல்பா Theeta நிலைக்கு ரொம்ப சுலபமா போயிடுது. அந்த மெல்லிய ஒலி அதிர்வுகள், நம்மளுடைய அலைபாயிர மனதை  அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வருகிறது.. 


This is called Present moment Awareness.


அது மட்டும் இல்லாமல் நாம் கைகளை உரசும் போது,  நாம் வெறும் கையோடு தான் செல்கின்றோம் என்று ஒரு உளவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. Psychology of Detachment - ஈசன் அருளைத் தவிர நான் உலகத்தில் இருந்து வேற எதையும் எடுத்துட்டு போகல அப்படின்ற ஒரு பற்றற்ற நிலை.


இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இந்த ஒரு சன்னதிகுள்ள இவ்வளவு சயின்ஸ் அடங்கி இருக்கு. . இப்போ சிலை வடிவத்திற்கு வரலாம். அவர்கிட்ட இருக்கிற mazhu அதாவது கோடரி மற்றும் அபய முத்திரை.


In NeuroScience, Synaptic Pruning அப்படின்னு ஒரு செயல்முறை இருக்கு. நம்ம மூளையில தேவையற்ற எதிர்மறையான எண்ணங்கள், பயம், கோபம் இதெல்லாம் சேர்ந்து சில நரம்பு இணைப்புகளை உருவாக்கும்.  இந்த இணைப்புகளை மூளை தானாகவே வெட்டி எரியும் Process -க்கு  பெயர்தான் Synaptic Pruning.


சண்டிகேஸ்வரர் கையில இருக்கிற அந்த மனு வெறும் ஆயுதம் இல்லை அது நம்ம மூளையில் இருக்கிற தேவையில்லாத Negative thoughts யை வெட்டி எரியும் Cognitive re-structuring process ஐ குறிக்கின்றது. 


இப்போது அபய முத்திரைக்கு வருவோம்.  


அபய முத்திரை என்பது, பயப்பட வேண்டாம் அப்படின்ற பாதுகாப்பை நமக்கு தருகின்றது . அந்த முத்திரையை பார்க்கும் போது, பயத்தை உணர்த்தும் மூளையின் Amygdala  பகுதி அமைதி அடைகின்றது. Amygdala  என்பது நம்முடைய  உடம்பின் அலாரம் சிஸ்டம். 


Amygdala அமைதி அடையும் போது, Cortisol என்னும் மன அழுத்தத்திற்கான ஹார்மோன் உற்பத்தியும் குறைகின்றது,  அது குறைந்தால் நம்முடைய நரம்பு மண்டலமும் அமைதி அடைகின்றது.


இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது,  பண்டைய கால சிலைகள் வெறும் கற் சிலைகள் கிடையாது. அவை மனித மூளையை Hack  செய்கிற உளவியல் கருவிகள். 


அந்த அபய முத்திரையானது ஒரு நேச்சுரல் ஸ்ட்ரெஸ் ரிலீவர் ஆகும். 


எந்த ஒரு மாத்திரையும் இல்லாமல்,  ஜஸ்ட்  ஒரு முத்திரையை பார்த்து மூளை தானாகவே ஸ்ட்ரெஸ் releive ஆகிவிடும்.


அப்பப்பா என்ன ஒரு அட்வான்ஸ் டெக்னாலஜி! .


மொத்தத்தில் பார்த்தால், சண்டிகேஸ்வரர் சன்னதி என்பது ஒரு உளவியல் ரீசார்ஜ் ஸ்டேஷன்.  நம்முடைய ஈகோ, மன அழுத்தம் கவலைகள் இப்படி அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு அமைதியின் அதீத பலத்தை உணர்ந்து திரும்புவதற்கான இடம்தான் இது. 


ஒரு அமைதியான இருண்ட இடத்தில் நாம் நிற்கிறோம். நீர் விழும் அந்த White Noise கேக்குது. மெல்லமா கைய உரசும் போது, அஃப்யூப் பிரஷர் வேலை. மூளையில Melatonin  சுரக்குது, Amygdala  அமைதியாகி , Cortisol குறையுது.  ஒரு மனிதனுடைய உடம்பையும் மனசையும் ரீசெட் பண்ணுகிற இதைவிட ஒரு பர்பெக்ட்டான சிஸ்டம் உலகத்திலேயே இருக்க முடியுமா என்ன? 


சர்வம் சிவ மயம்!